பங்காளதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து!

நாளாந்தம் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பங்காளதேஷ் டாக்கா Hazrat Shahjalal சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமைத்துவ பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை தீ விபத்தினை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் டாக்கா விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானங்கள் ஏனைய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

அத்துடன் டாக்காவில் இருந்து புறப்படவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தீ விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பதுடன் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply