பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் | samsung galaxy m07 smartphone launched at budget price specs

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேலக்சி எம்07 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் அதன் ‘எம்’ சீரிஸ் போன் வரிசையில் புது வரவாக கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள்:

  • 6.7 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 + 2 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 25 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

நன்றி

Leave a Reply