பவுன் ரூ.3,000 சரிவு: ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் விலை குறைந்தது தங்கம் விலை | Gold Rate continue to decrease

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதாவது, பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் தொடக்கத் தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.

இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் நேற்று ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.1,200-ம், மாலையில் ரூ.1,800-ம் குறைந்தது. கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.7,400 வரை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,075-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.96,648 ஆக இருந்தது. இதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,65,000 ஆகவும் இருந்தது.

நன்றி

Leave a Reply