இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாயினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

