கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
லீ பிகாரோ பத்திரிகைக்கான வெரியன் கருத்துக் கணிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் மக்களில் வெறுமனே 11 சதவீதமானோர் மட்டுமே மெக்ரோனை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் பதவி விலகினர்.
இந்நிலையில் மக்களின் நலச்சீர்த்திருத்தங்களில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செலவீன குறைப்பு சட்டமூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அந்த கோரிக்கைகளை மறுத்துள்ளார்.
இந்நிலையில் பிரான்சில் தற்போதை அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இதன்காரணமாகவே அவருடைய புகழ் குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
