பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை!

பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வன்முறையை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

பீஹாரில் மொத்தம், 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளையதினம் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி கடந்த சில தினங்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மாநிலம் முழுதும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றன.

இதேவேளை, வாக்கிற்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையகம் 824 பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது.

அதன்படி, இதுவரை 10 கோடி ரூபாய் பணம் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

இந்நிலையில் பிரசாரம் முடிவடைந்து முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை காலை 7:00 மணிக்கு ஆரம்பமாவதுடன் வாக்குப்பதிவு மாலை 6:00 மணிக்கு முடிவடையவுள்ளது.

நன்றி

Leave a Reply