பூமிக்குள் அணு மின் நிலையம் – புதிய தொழில்நுட்ப முயற்சி

 

அமெரிக்காவின் Deep Fission என்ற கலிபோர்னியா ஸ்டார்ட்அப் நிறுவனம் உலகில் முதல் முறையாக நிலத்தடியில் அணு ரியாக்டர் அமைக்கப் பயன்படும் ஆழமான borehole (துளை) தோண்டுதல் பணியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 1 மைல் (1.6 கிமீ) ஆழத்தில் நிலத்தடியில் அணு ரியாக்டர் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  தொடக்கமாக, அமெரிக்காவின் கான்சஸ் மாநிலம் Parsons பகுதியில் ஒரு சோதனைத் திட்டத்திற்காக மூன்று கிணறு போன்ற ஆழமான துளைகள் தோண்டப்படுகின்றன.   இந்தக் கிணறு சுமார் 6,000 அடி (1,830 மீட்டர்) ஆழம் வரை தோண்டப்படும்.

இந்த திட்டத்தில் “Gravityஎனப்படும் சிறிய அணு ரியாக்டர் பயன்படுத்தப்படும். ரியாக்டர் நிலத்தடியில் இருப்பதால் மேலே இருக்கும் கனமான கற்கள் மற்றும் நீர் இயற்கை பாதுகாப்பு அடுக்கு போல செயல்படும். இதனால் விபத்து அபாயம் குறையும், அணு நிலைய கட்டுமான செலவு குறையலாம் என்பதுடன்  சிறிய அளவில் பல ரியாக்டர்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

ஒவ்வொரு சிறிய ரியாக்டரும் சுமார் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். பல ரியாக்டர்களை ஒன்றாக அமைத்தால் 150 MW முதல் 1.5 GW வரை மின் உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.  இந்த திட்டம் வெற்றி பெற்றால், பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவு அணு மின்சாரம் உருவாக்கும் புதிய முறையாக உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

#Deep Fission # borehole #Parsons   #GravityReactor  #CleanEnergy

நன்றி

Leave a Reply