பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவுசெய்த, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் (U-19) உறுப்பினர்கள் என நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளதோடு, அவ்வாறு பெறப்பட்ட காணொளிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply