ரக்வான பகுதியில் ரூ.364,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததாக தேடப்படும் பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரக்வான, கொடகவெல பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் இருந்து நகைகள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த ஒரு பெண் இந்த பொருட்களை திருடியதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தேடப்படும் பெண் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற எண்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.