போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதின் போது சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply