போயிங் விமான தயாரிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு!

பிரபலமான விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை போயிங் நிறுவனம் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றது.

அதன்படி அமெரிக்காவின் செயிண்ட் லுயிஸ், செயிண்ட் சார்லஸ், மிசோரிஸ், மஸ்கவுட், இலினொயிஸ் போன்ற பகுதிகளில் இந் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இத் தொழிற்சாலைகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் சர்வதேச இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளித் தொழிலாளர்கள் சங்கத்தின் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலார்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் பணி நிறுத்தத்தின் காரணமாக போர் விமானங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போயிங்கின் பல்வேறு விமான விபத்துக்களின் மத்தியில் போயிங் அதன் நற்பெயரை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கும் வேளையில் இவ்வாறானதொரு பணி நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

நன்றி

Leave a Reply