போலந்து மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டுள்ளன.
போலந்து மீதான இந்த தாக்குதல் யுக்ரேன் மீதான அண்மைய வான் தாக்குதல்களின் ஒரு அங்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போலந்து மீது ரஷ்யா நேற்று இரவு ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு யுக்ரேனில் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ரஷ்யா நேற்று இரவு 19 ட்ரோன்கள் தமது நாட்டின் வான்பரப்பில் செலுத்தியிருந்ததாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது போலந்து மற்றும் நேட்டோ விமானங்களினால் 4 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் வான்வழி ஊடுறுவலை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்
இதனிடையே ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகனைத்தொடர்ந்து ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை காணப்படுவதாக ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டனியோ கொஸ்டா தெரிவித்துள்ளார்
மேலும் இந்த தாக்குதலை தற்செயலான சம்பவம் என்பதை நம்புவது கடினமாகும் என செக் குடியரசின் பிரதமர் பெட்டர் பியாலா தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுக்ரேனுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் நட்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என லத்விய ஜனாதிபதி எட்கர்ஸ் ரிங்கேவிச் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போலந்து வான்வெளி தாக்குதலை ரஷ்யா நிராகரித்துள்ளது. அத்துடன் போலந்து மீதான இந்த தாக்குதல் யுக்ரேன் மீதான அண்மைய வான் தாக்குதல்களின் ஒரு அங்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் ரஷ்யாவின் இந்த தாக்குதலானது ஐரோப்பாவிற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும் என யுக்ரேன் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.