மகளிர் உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலியா – இலங்கை இன்று மோதல்!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (04) நடைபெறும் ஒரு முக்கியமானப் போட்டியில் இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியானது கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

நடப்பு சாம்பியன்களாகவும், போட்டியின் பிரதான அணிகளில் ஒன்றாகவும் இருக்கும் அலிசா ஹீலி தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது, இந்தூரில் தான் எதிர்கொண்ட தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 89 ஓட்டங்களினால் தோற்கடித்தது.  

அதேநேரத்தில், குவாத்தியில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியானது டக்வெத் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்களினால் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இன்று ஆரம்பமாகும் போட்டியில் இரண்டாவது வெற்றிக்காக அவுஸ்திரேலியாவும், சொந்த மண்ணில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளன. 

இரு அணிகளும் இதுவரை 11 மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன. 

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply