மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து 3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கான்ஸ்டபிள்


கொழும்பு, பொரளை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரிபவர்களை மிரட்டி மூன்று பணிப்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பிச் செல்ல முயன்ற இருவரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொரளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசெட அதிரடிப்படையின் தலைமையகத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தப்பிச் செல்ல முயன்ற போது மேல் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்ற மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

நன்றி

Leave a Reply