மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு! – Athavan News

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கலால் திணைக்களம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக இன்று (03) நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

அந்த உத்தரவுக்கு அமைவாக, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மதுபான விற்பனை நடவடிக்கைளை நிறுத்தி வைக்க வேண்டும்.

இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மது அருந்துவதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் ஒக்டோபர் 3 திகதி உலக மது ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply