மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் சந்திப்புப் பகுதியிலிருந்து மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்த கார் ஒன்று, முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரவிக்கின்றன.

விபத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இருவர் பலத்த காயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply