மத்திய அரசு விளக்கம் – Athavan News

கீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம் செய்ய வேண்டுமெனக் கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்தார். அதில், கீழடி அகழாய்வு அறிக்கை தற்போது துறைசார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் இருப்பதாகவும், அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட முறை, காலவரிசை, விரிவான பகுப்பாய்வு உள்ளிட்ட அம்சங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அகழாய்வுக் குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2014 ஆம் அண்டு  முதல் 2017 ஆண்டு வரை, கீழடியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply