மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலை வளாகங்களின் நிலை குறித்த விரைவான மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகள், பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் NBRO அதிகாரிகளைக் கொண்ட 15 பேர் கொண்ட நிபுணர் குழுவால் வழிநடத்தப்படுகின்றன.

இதற்கிடையில், மழை நிலைமைகள் குறைந்து வருவதால், கண்டி மாவட்டத்திற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை திருத்தப்பட்டுள்ளது. 

உடுதும்பர, தொலுவ, மினிபே, மெததும்பர மற்றும் கங்கை இஹல கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இப்போது குறிப்பாக சிவப்பு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply