மருதனார்மடத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

 

யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த கோபாலபிள்ளை கமலதாஸ் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை கிணற்று கட்டுக்கு அருகில் செருப்புகளும் காணப்பட்டதை அடுத்து , கிணற்றுக்குள் பார்த்த வேளை சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார்.  அதனை அடுத்து சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்ட வேளை சடலமாக மீட்கப்பட்டவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த   காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#JaffnaNews #Maruthanarmadam #Manipay #PoliceInvestigation #UnfortunateIncident

நன்றி

Leave a Reply