இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.
முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது.
இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர்.
ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.
இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.