மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள  தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு  உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு  தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply