மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு,
புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை
வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்,
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்
தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply