மிஸ் யுனிவர்ஸ் இந்தியா – பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி!




மிஸ் யுனிவர்ஸ் இந்தியா – பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி! – Athavan News
































மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா  பட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தட்டிச் சென்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான இந்தியாவின் போட்டியாளரை தெரிவு செய்வதற்கான, மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் இப் போட்டியில் கலந்துகொண்டனர்.
இறுதியில் அந்த மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளர் ரியா சிங்கா அவருக்கு மகுடம் சூட்டினார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74ஆவது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி

Leave a Reply