மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டிய பிரதமர்

தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து, பாரிய அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டமைக்காகப் பிரதமர்  ஹரிணி அமரசூரிய பாராட்டுத் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இராணுவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த போதிலும், சரியான தீர்மானத்தை எடுத்தல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தலைமைத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக என்றும் நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்ற போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply