மீண்டும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் நேற்றிரவு துபாயில் நடந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

போட்டியில் அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தது 172 என்ற வெற்றி இலக்கினை கடப்பதற்கு இந்தியாவுக்கு உதவியாக அமைந்தது.

அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.

அவர் 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

அபிஷேக்கிற்கு ஷுப்மான் கில் (28 பந்துகளில் 47 ஓட்டங்கள்) சிறந்த முறையில் தோள் கொடுத்து ஆடினார்.

தொடக்க வீரர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 105 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இது பாகிஸ்தானின் வெற்றிக் கனவினை கிட்டத்தட்ட மழுங்கடித்தது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளைக் கண்டது.

போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிகபட்சமாக 45 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றார்.

இந்தியாவுக்காக சிவம் துபே இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.

இந்த ஆசியக் கிண்ணத்தின் பார்வை வெறும் கிரிக்கெட்டையும் விஞ்சியிருந்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் நிழல், இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடித் தாக்குதல்கள் மற்றும் பரந்த அரசியல் பதற்றம் ஆகியவை மைதானத்தில் தவிர்க்க முடியாமல் பரவின.

துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும், மைதானத்தில் இருந்த பரபரப்பான சூழல் எதிர்பாராதது அல்ல.

போட்டியின் முடிவில் இரு அணிகளுக்கும் இடையிலான குழு நிலைப் போட்டியைப் போலவே, இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கைகுலுக்கல்கள் எதுவும் இல்லை.

அத்துடன், அணி வீரர்களுக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்களும் மைதானத்தில் அரங்கேறின.

Image

நன்றி

Leave a Reply