மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி! – Athavan News

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் துடுப்பாட்டம் அவரை மீண்டும் ஒரு உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்திய வீரர் விராட் கோலி ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்தார்.

2021 ஜூலை மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக அவர் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான இந்தியாவின் நான்கு விக்கெட் வெற்றிக்கு விராட் கோலியின் 91 பந்துகளில் 93 ஓட்டங்கள் ஒரு மூலக்கல்லாக அமைந்தது.

மேலும் 37 வயதில் கூட, அவர் ஏன் ஒருநாள் வடிவிலான கிரிக்கெட்டில் மிகவும் நம்பகமான ரன்-மெஷினாக இருக்கிறார் என்பதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியது. 

இந்த வெற்றி இன்னிங்ஸ் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவியது மட்டுமல்லாமல் கோலி, சக வீரர் ரோஹித் சர்மாவை முந்தி முதலிடத்தை மீண்டும் பெற உதவியது.

Image

புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் ரோஹித் மூன்றாவது இடத்திற்கு சரிந்தார்.

நியூஸிலாந்துடனான இந்த ஆட்டம் பல துறைகளில் விராட் கோலிக்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

இது அவரை ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக மாற்றியது.

சச்சின் டெண்டுல்கரின் அனைத்து நேர சாதனையையும் இடைவிடாமல் பின்தொடர்வதில் மற்றொரு மைல்கல்லைக் கடந்தது. 

2013 ஒக்டோபரில் கோலி முதன்முதலில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும் இந்த அண்மைய முன்னேற்றம் அவர் தனித்தனியான சந்தர்ப்பங்களில் 11 வது முறையாக முதலிடத்துக்கு வந்ததை குறிக்கின்றது.

 

நன்றி

Leave a Reply