பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்றார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்படவில்லை. இதனால் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பீகாரில், ‘வாக்காளர்களின் உரிமை யாத்திரை’யை கடந்த 17ஆம் திகதி ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலின் இந்த யாத்திரையில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் அலை அலையாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பேரணியின் நிறைவுநாளான இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்கு திருட்டை கண்டித்தும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செல்பி எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது x தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி “எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன். பீகாரிலும் முழு நாட்டிலும் வோட் சோரிக்கு எதிரான எங்கள் போராட்டத்தை உங்கள் வருகை மேலும் வலுப்படுத்துகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.