போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இதுகுறித்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றிய காலத்தில், மூத்த அரச அதிகாரி ஒருவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
The post முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா! appeared first on LNW Tamil.
