முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

முச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களை கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (21) கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர்கள் முச்சக்கர வண்டியில் பயணிப்பதாக கூறி முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து, சாரதியின் முகத்தில் மிளகாய் தூள் வீசியது தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபர் ஒருவரின் மனைவியும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர்கள் கலவான, கஹதுடுவ பகுதிகளைச் சேர்ந்த 24, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ, பொரலஸ்கமுவ மற்றும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுகளில் அவர்கள் முச்சக்கர வண்டிகளைத் திருடியுள்ளனர்.

மேலும் நான்கு திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply