முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை – Oruvan.com

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டிய குற்றச்சாட்டில் இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்
கைது செய்யப்பட்டிருந்தார்.

விளையாட்டு அமைச்சு, தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சராகப் பதவி வகித்த சீ.பி ரத்நாயக்க இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply