முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!











முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! – Athavan News
































அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இதன்போது, இலஞ்ச ஊழல் விசார​ணை ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின் கீழ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply