முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கைத் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
“யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும், தமிழ் இளைஞர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது பாரதூரமான விடயம். இதற்கு நீதி கோரி, வடக்கு-கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து 15ஆம் திகதி ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,” என சாணக்கியன் வலியுறுத்தினார்.