முஸ்லிம்களின் இன்னல்களுக்கு அமைதியான தீர்வுகளை வேண்டி நிற்கிறோம்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழும் முஸ்லிம் சமூ­கத்­தினர் காலா­கா­ல­மாக எதிர்­கொண்டு வரும் துய­ரங்­க­ளுக்கு அமை­தி­யான நிரந்­தரத் தீர்வை நாடி நிற்­ப­தாக வேண்­டுகோள் விடுக்கும் மக­ஜர்கள் கனே­டிய உயர்ஸ்­தா­னிக­ரா­ல­யத்தின் அர­சியல் பிரிவு அதி­கா­ரிகள் குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.


மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் சவால்­களைக் கண்­ட­றியும் வகை­யி­ல்­ விஜ­ய­மொன்றை அதி­கா­ரிகள் மேற்­கொண்­டி­ருந்­தனர்.


கிழக்கு சமூக அபி­வி­ருத்தி மையத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்­மத்தின் ஏற்­பாட்டில் வாழைச்­சே­னை­யி­லுள்ள கிழக்கு சமூக அபி­வி­ருத்தி மைய அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பில் கன­டாவின் இலங்கை மாலை­தீ­வு­க­ளுக்­கான அர­சியல் மற்றும் வர்த்­தகப் பிரிவு ஆலோ­சகர் க்வென் ரெம்மெல் (Gwen Temmel) மற்றும் அர­சியல் பிரிவு அதி­காரி சாகித்­தி­யன் கணே­ச­நாதன் ஆகி­யோரும் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.


சந்­திப்­பின்­போது கனே­டிய அதி­கா­ரி­க­ளிடம் மாவட்­டத்தில் எதிர்­கொள்­ளப்­படும் சக­வாழ்­வுக்கு சவா­லான விட­யங்கள் அறிக்­கை­யாக கைய­ளிக்­கப்­பட்­டன. கிழக்கு சமூக அபி­வி­ருத்தி மையத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் புஹாரி, சமூக ஆய்­வா­ளரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான ஏ.எச்.ஏ.ஹுஸைன் ஆகியோர் அறிக்­கை­களை கைய­ளித்­தனர்.


அந்த அறிக்­கையில் மாவட்­டத்தின் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் ஒட்டு மொத்த நெருக்­கடி நிலைமை பற்றி விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.


அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,


மட்­டக்­க­ளப்பு மாவட்டம் 2633 சதுர கி.மீ பரப்­ப­ள­வுடன் 14 பிர­தேச செய­லகப் பிரி­வு­களைக் கொண்­டுள்­ளது. இங்கு நான்கு முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரி­வுகள் உள்­ளன.


காத்­தான்­குடி (3.4 சதுர கி.மீ), ஏறாவூர் நகரம் (3.89 சதுர கி.மீ), கோற­ளைப்பற்று மேற்கு அல்­லது ஓட்­ட­மா­வடி (6.84 சதுர கி.மீ), மற்றும் கோற­ளைப்­பற்று மத்தி (6.50 சதுர கி.மீ) ஆகி­யவை அடங்கும்.


முஸ்லிம் பிர­தேச செய­லாளர் பிரி­வு­களின் மொத்த நிலப்­ப­ரப்­ப­ளவு சுமார் 20.0 சதுர கி.மீ ஆகும். இது இன்று முஸ்லிம் மக்கள் தொகை கிட்­டத்­தட்ட 30 வீத­மாக இருக்கும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மொத்த பரப்­ப­ளவில் 1.0சத வீதத்­துக்கும் குறைவானதாகும்.


உள்­ளூராட்சி ஆணைக்­குழு கோற­ளைப்­பற்று மத்­திய பிர­தே­சத்தை முஸ்­லிம்­களின் வர­லாற்று வாழ்­விடப் பகு­தி­யாக அறி­வித்த போதிலும், 240 சதுர கி.மீ.க்கும் அதி­க­மான பரப்­ப­ளவில் 11 கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்­டுள்ள இந்தப் பிர­தேச செய­லகப் பிரிவின், அதன் எல்­லைகள் இன்னும் வரை­ய­றுக்­கப்­ப­ட­வில்லை.


கிழக்கு மாகாணம் காத்­தான்­குடி நகரில் சில கிராம அலு­வலர் பிரி­வு­களில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ­மீட்­ட­ருக்கு 7747 ஆகும்.


இந்தக் கார­ணத்­தினால், தென்­கி­ழக்கு ஆசியா முழு­வ­திலும் மிகவும் அடர்த்­தி­யான மக்கள் தொகை கொண்ட பகு­தி­யாக காத்­தான்­குடிப் பிர­தேசம் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.


இந்த நிலைமை தொடர அனு­ம­திக்­கப்­பட்டால், இன்னும் 10 ஆண்­டு­க­ளுக்குள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் மேலும் மோச­ம­டையும் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது.


சுமார் 170 ஆயிரம் பேர் வசிக்கும் முஸ்லிம் பிரி­வு­களில் மக்கள் தொகை அடர்த்தி அதி­க­மாக இருப்­பதால், அவர்கள் சுகா­தாரம், குடி­யி­ருக்க வாழ்­விடம் இல்­லாத நிலைமை போன்­ற­வற்றில் சொல்­லொணா சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.


அண்டை பகு­தி­களில் உள்ள தமிழ் மக்கள் அனு­ப­விக்கும் கஷ்­டங்­களை விட இங்­குள்ள முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் கஷ்­டங்கள் மிக அதிகம்.


இந்தப் பிரச்­சி­னைகள் மற்ற அண்டை பகு­தி­க­ளிலும் பாத­க­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும்.


முஸ்லிம் பிர­தே­சங்­களில் அசா­தா­ரண மக்கள் தொகை அடர்த்தி கார­ண­மாக, முஸ்லிம் மக்கள் பல்­வேறு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அவற்றில் சில,


01. சுத்­த­மான குடிநீர் கிடைக்­காத பிரச்­சினை

02. சுகா­தா­ரமும் ஆரோக்­கி­யமும் இன்மை

03. சுற்­றுச்­சூழல் மாசு­பாடு

04. குடி­யி­ருப்பு நிலம் கிடைக்­காமை.


சுத்­த­மான குடி­நீரின் கிடைக்கப் பெறு­வ­தி­லுள்ள பிரச்­சினை

நிலத்­தடி நீர் ஏற்­கெ­னவே மாசு­பட்­டுள்­ளது. இதனால் ஏற்படும் குடிநீர் பிரச்சினை பல விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

மக்கள் தொகை அடர்த்தி கார­ண­மாக பல்­வேறு வகை­யான தொற்­று­நோய்கள் எளிதில் பர­வு­வ­தற்­கான வலு­வான சாத்­தி­யக்­கூ­றுகள் உள்­ளன.


டெங்­கு­நோயால் இறப்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலையில், கொலரா, டைபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்­களால் மக்கள் பாதிக்­கப்­படும் அபாயம் உள்­ளது.


சூழல் மாசு­பாடு நிலப்­ப­ரப்­பு­களை சேறும் சக­தி­யு­மாக மாற்­றலாம், விஷ­மா­கவும், நீர்­வ­ழி­க­ளா­கவும் மாறலாம் அல்­லது தாவ­ரங்கள் மற்றும் விலங்­கு­களும் அழிவைச் சந்­திக்­கலாம்.


மனி­தர்­களும் தொடர்ந்து மாசு­பாட்டால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

உதா­ர­ண­மாக, மற்ற பிர­தேச செய­லக நிர்­வாகப் பிரி­வு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது, முஸ்லிம் பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் நாள்­பட்ட சுவாச நோய், நுரை­யீரல் புற்­றுநோய் மற்றும் பிற நோய்­க­ளுக்கு வழி­வ­குக்கும் சூழல் நில­வு­கி­றது.


காணி வழங்கப்படாமை

10 பேர்ச்சஸ் பகு­திக்குள் 3 முதல் 4 குடும்­பங்கள் வசிக்­கி­றார்கள்.

அரச நிலம் இல்லை. மற்ற பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது, குடி­நீரில் நிறைய பிரச்­சி­னைகள் உள்­ளன. குடி­யேற்­றத்­திற்­கான நிலம் கிடைக்­கா­தது. எதிர்­கா­லத்தில் நிலம் கிடைக்­கா­ததால், குடும்­பங்கள் விரி­வ­டை­யும்­போது, விரைவில் தீர்வு வழங்­கப்­ப­டா­விட்டால் மக்கள் வாழ முடி­யாழ்­நிலை நில­வு­கி­றது.


மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் பிர­தே­சங்­களில் காணிக்கு கொழும்பு நகரில் நிலவும் விலை நிர்­ண­யங்­களை விட விலை உயர்ந்­துள்­ளது. மக்கள் அதிக விலைக்கு நிலம் வாங்க வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளனர்.


இந்த நெருக்­க­டியை சமா­ளிக்க இந்தப் பிரி­வு­களில், மக்­க­ளுக்கு இடையில் குறு­கிய இடை­வெ­ளி­க­ளுடன் வீடு­களைக் கட்­டு­வதைத் தவிர வேறு தீர்வு இல்லை.


1985ஆம் ஆண்டு இனக் கல­வ­ரங்­க­ளுக்குப் பிறகு, தமி­ழீழ விடு­தலைப் புலிகள் 35,000 ஏக்­க­ருக்கும் அதி­க­மான முஸ்லிம் குடி­யி­ருப்பு, விவ­சாயம் மற்றும் கால்­நடை வளர்ப்பு நிலங்­களை வலுக்­கட்­டா­ய­மாக ஆக்­கி­ர­மித்­தனர்.


உரிமைப் பத்­தி­ரங்கள், அர­சாங்க அனு­ம­திகள் அல்­லது நெல் செய்கை பதி­வேட்டின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் தங்கள் சொத்­துக்­களை மீண்டும் பெறு­வ­தற்கு அர­சாங்கம் எதுவும் செய்­ய­வில்லை.


1983, 1985 மற்றும் 1990ஆம் ஆண்­டு­களில் நடந்த இன மோத­லின்­போது 12,700க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் எல்­ரீ­ரீஈ அமைப்பின் ஆயு­த­தா­ரி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டன.


எல்­ரீ­ரீஈ ஆயுதக் குழுவின் கீழ் வந்த அனைத்து முஸ்லிம் நிலங்­க­ளையும் எல்­ரீ­ரீஈ ஆத­ரவுத் தமி­ழர்கள் வலுக்­கட்­டா­ய­மாக ஆக்­கி­ர­மித்­தனர். இங்கும் அர­சாங்கம் இந்த இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் வாழ்­வா­தார இழப்­புக்கு எந்த நிவா­ர­ணமும் வழங்­கவோ அல்­லது இழப்­பீடு வழங்­கவோ எதுவும் செய்­ய­வில்லை.


இந்த கடு­மை­யான நிலப் பிரச்­சி­னையை நிரந்­த­ர­மாகத் தீர்க்கும் வகையில் பொருத்­த­மான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும். எனவே, அர­சாங்கம் பிரச்­சினைத் தீர்வை பரி­சீ­லனை செய்ய வேண்டும்.


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தே­சங்­களில் பத்­தா­யிரம் முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­வ­தற்கு ஒரு துண்டு நிலம் கூட இல்­லாமல் நிர்க்­கதி நிலையில் அலைக்­க­ழிந்து வரு­கின்­றனர்.


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மொத்த நிலப்­ப­ரப்பை இன விகி­தா­சார அடிப்­ப­டையில் பகிர்ந்­த­ளித்தால் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 800 சதுர கிலோ­மீட்டர் நிலம் கிடைத்­தி­ருக்க வேண்டும். ஆனால் இப்­பொ­ழுது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 4 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளிலும் வாழும் சுமார் ஒரு இலட்­சத்து 70 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் வெறும் 20 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ள­வுக்­குள்­ளேயே முடக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 – Vidivelli –

நன்றி

Leave a Reply