வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.
கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மீட்பு பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதுடன் ரேமண்ட் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு உதவ தாம் பணியாற்றுவதாகவும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரச் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்
(Claudia Sheinbaum) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.