இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியுடன் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி ஏழு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த போட்டி தொடரானது இம்மாத இறுதியில் ஆரம்பமாகிறது. முதல் ஒருநாள் போட்டியானது 30ஆம் திகதியும், இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது ஆறாவது ஏழாவது போட்டிகள் முறையே செப்டம்பர் 2, 4, 7, 9, 12, 15ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.
இதில் முதல் நான்கு போட்டிகளும் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்திலும், இறுதி மூன்று போட்டிகள் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெற உள்ளன. குறித்த தொடரில் பங்கேற்கும் இலங்கை இளையோர் அணி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கையில் இருந்து மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணிக்க உள்ளது.