மாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து ஒருதொகை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பகுதியிலிருந்து பல்வேறு வகையான 448 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.