யார் செவ்வந்தியை நேசித்தாலும், ஆதரவு அளித்தாலும் போதைப்பொருள் கடத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவருக்கும் NPP அரசாங்கத்தில் சலுகை கிடையாது. செவ்வந்தி’ தொடர்பான விசாரணைகள் மற்றும் நாட்டில் போதைப்பொருள், குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை முற்றாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் அரசியல் ஆதரவு இன்றி இலங்கையில் தொடர முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.

