யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

 

 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார்.

இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

#JaffnaOldPark #HighCourtOrder #MASumanthiran #JaffnaLegal #EnvironmentProtection #யாழ்ப்பாணம் #பழையபூங்கா #மேல்நீதிமன்றம் #இடைக்காலத்தடை #உள்ளகவிளையாட்டுஅரங்கு #சட்டவழக்கு

 

நன்றி

Leave a Reply