53
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி – புத்தூர் வீதியில் கனகம்புளியடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த நிலையில் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு பெண் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#JaffnaAccident #Chavakachcheri #RoadSafety #Tragedy
