76
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திறமை அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
#UniversityOfJaffna #ProfessorPromotion #AcademicExcellence #JaffnaCampus #UGC_SriLanka
Share this:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to email a link to a friend (Opens in new window) Email
