ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு | India in talks to buy S-400 missiles from Russia worth Rs 10000 crore

புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ரஷ்​யா​வுடன் இந்​தியா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​விட​மிருந்து 5 எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, இது​வரை 3 ஏவு​கணை தொகுப்​பு​கள் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, உக்​ரைன் போர் காரண​மாக மற்ற 2 ஏவு​கணை​களை விநி​யோகம் செய்​வது தாமத​மாகி வரு​கிறது. தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும் இந்த ஏவு​கணை இந்​தி​யா​வில் சுதர்சன சக்​ரம் என அழைக்​கப்​படு​கிறது.

இதற்கு நடு​வே, கடந்த மே மாதம் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் ஏற்​பட்​டது. அப்​போது பாகிஸ்​தானின் வான் வழி தாக்​குதலை எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை​கள் வெற்​றிகர​மாக விண்​ணிலேயே தாக்கி அழித்​தன. குறிப்​பாக பாகிஸ்​தானின் 5 முதல் 6 போர் விமானங்​கள் மற்​றும் ஒரு உளவு விமானத்தை 300 கி.மீ. தொலை​வில் வரும் போதே சுட்டு வீழ்த்​தி​யது.

இந்த சூழ்​நிலை​யில் பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “இந்​தி​யா​வின் வான் தடுப்பு திறனை மேம்​படுத்​து​வதற்​காக கூடு​தலாக ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்​பு​களை வாங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ரஷ்​யா​வுடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது” என தெரி​வித்​தன.

ராணுவ தளவாட கொள்​முதல் கவுன்​சில் கூட்​டம் இன்று நடை​பெறுகிறது. இதில் எஸ்​-400 ஏவு​கணை​களை கூடு​தலாக வாங்​கும் திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்​கு​மாறு விமானப்​படை கோரிக்கை வைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும் ரஷ்​யா​விட​மிருந்து எஸ்​-500 ஏவு​கணை (தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும்) தொகுப்​பு, வானிலிருந்து வான் இலக்கை தாக்​கும் ஏவு​கணை​களை வாங்​கு​வது குறித்​தும் இந்​தியா பரிசீலித்து வரு​கிறது. இதுத​விர, பிரம்​மோஸ் சூப்​பர்சோனிக் குரூஸ் ஏவு​கணை மற்​றும் அதன் அடுத்த தலை​முறை வகைகளை மேம்​படுத்​து​வது குறித்​தும்​ இரு நாடு​களும்​ ஆலோ​சித்​து வருகின்​றன.

நன்றி

Leave a Reply