63
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன விரைவில் சர்வதேச சந்தை விலையை விடச் சாதகமான விலையில் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.இந்த நடவடிக்கை, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை நிலைப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#RussiaSriLanka #FuelImport #CPCSriLanka #EnergyCooperation #PetrolDieselUpdate
