ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை | Gold price crosses Rs 93000

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதன் பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்தது.

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.93 ஆயிரத்தை தாண்​டியது. பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்​து, ரூ.93,600-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.220 உயர்ந்​து, ரூ.11,700-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1,02,104 ஆக இருந்​தது. இது​போல,வெள்ளி கிரா​முக்கு ரூ.1 உயர்ந்​து, ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்​து, ரூ,1.70 லட்சமாகவும் இருந்தது.

நன்றி

Leave a Reply