லடாக்கில், யூனியன் பிரதேசமாக தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக கடந்த 10ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது.
மேலும் அடுத்த மாதம் அக்டோபர் 6ம் திகதி மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் தீயணைப்பு பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.இதன்போது பொலிஸாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அதோடு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகபாஜக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.