வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று (24) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன.

இது இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுதோறும் 34 பில்லியன் அமெரிக்க ‍டொலர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்தின் வெளிவிவகாரச் செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் இடையே கையெழுத்தானது.

பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையே லண்டனில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நன்றி

Leave a Reply