திருகோணமலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை இன்று (வெள்ளிக்கிழமை, 16) நேரில் சந்தித்த பின்னர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தனது வழமையான பாணியில் கருத்துக்களை வெளியிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நேரடி அழுத்தம் காரணமாகவே தேரர்கள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தின் மீது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடும் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளைத் தூண்டிவிட்டு விட்டு, தற்போது அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தந்திரமாக ஒதுங்கிக்கொண்டார் எனவும், அரச திணைக்களம் தற்போது தனித்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக விமல் வீரவன்ச இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
எனினும் இவவர் முன்னர் அங்கம் வகித்த அரசாங்கங்கள் தமது அரசியல் தேவைகளுக்காக அரச நிறுவனங்களை பயன்படுத்தியமை குறித்து சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
________________________________________
The post விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்! appeared first on Global Tamil News.
