ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

நடந்து வரும் 600 மில்லியன் இந்திய ரூபா மோசடி வழக்கில் போலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஒக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக இலங்கை தலைநகர் கொழும்புக்கு பயணிக்க அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை மேல் நீதிமன்றம் புதன்கிழமை (08) நிராகரித்தது. 

60 கோடி இந்திய ரூபா மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

ஷெட்டியின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள தொகையை அவர் முதலில் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 

அண்மைய வாரங்களில், இந்த ஜோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் – லொஸ் ஏஞ்சல்ஸுக்கு ஒரு திட்டமிடப்பட்ட பயணம் உட்பட – சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மேலும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ஏற்கனவே ஒரு லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply