ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த 7 ஆம் தர மாணவனான கௌசிக் பாடசாலைக்கு புறப்படும் வேளை வீட்டின் வெளியே இருந்த ஷூவை எடுத்து அணிவித்தபோது அதில் இருந்த பாம்பு கடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.