ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார். இதைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால், அது நடக்கும் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உயர் அரசியலமைப்பு பதவிகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வகிக்க முடியும் என்பதாக அதன் அரசியலமைப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் நாட்டின் உயர் அரசியலமைப்புப் பதவிகளை வகிக்க முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஒவைசியின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா, ‘‘ஹிஜாப் அணிந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார் என ஒவைசி கூறுகிறார். அரசியல் சாசனம் யாரையும் தடுக்கவில்லை. ஆனால், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். பஸ்பண்டா (பிற்படுத்தப்பட்ட) முஸ்லிமோ, ஹிஜாப் அணிந்த ஒருவரோ உங்கள் கட்சியின் தலைவராக முடியுமா?’’ என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

