மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் காரணமாக லெபனானில் மனிதாபிமான நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடு முழுவதும் 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் குறிப்பிட்டுள்ளாா்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நேரடி மோதல் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
#LebanonCrisis #DisplacedPeople #IsraelLebanonWar #HumanitarianAid #MiddleEastConflict2026
The post “ஹிஸ்புல்லா – இஸ்ரேல் மோதலால் நிலைகுலைந்த லெபனான்: 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!” appeared first on Global Tamil News.
